News December 31, 2024
விருதுநகரில் இன்று வாண வேடிக்கை நிகழ்ச்சி

பட்டாசு தொழிற்சாலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும் வாண வேடிக்கை நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் உள்ள பொருட்காட்சித் திடலில் இன்று (டிச.31) இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாண வேடிக்கையைக் காண மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News November 25, 2025
விருதுநகர்: வழிபறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் கைது

சிவகாசி பள்ளப்பட்டி ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ராமர் 42. பழக்கடை நடத்தி வரும் இவர் கடையில் இருந்த போது அங்கு போதையில் வந்த திருத்தங்கல் தெற்கு தெரு சாமுவேல், முருகன் காலனி சந்தோஷ் உள்ளிட்ட சிலர் ராமரை அடித்து ரூ. 2 ஆயிரம் பறித்தனர்.மேலும் அரிவாள், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு போலீசார் விசாரித்து 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்தனர்.
News November 25, 2025
விருதுநகர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

விருதுநகர் மக்களே சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 25, 2025
விருதுநகர்:பெண் போலீசாரிடம் தகராறு; போலீஸ்காரர் இடமாற்றம்

விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது.கார்த்திகேயனின் மனைவி,போலீசில் புகார் அளித்ததில் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.


