News August 17, 2024
விருதுநகரில் அதிகரித்து வரும் காலிப்பணியிடங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை 449 ஆகும். இதன்படி, 1040 டிரைவர்கள் மற்றும் 960 நடத்துநர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பலர் பணி நிறைவு, வயது முதிர்வு காரணமாக விருப்ப ஓய்வு பெறுவதால், காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, மாவட்டத்தில், 150 டிரைவர்கள், 200 நடத்துநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனை, நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News November 21, 2025
விருதுநகர்: தகாத உறவு.. போலீஸ் ஏட்டு ‘சஸ்பெண்ட்’

விருதுநகர் மாவட்டம், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஜெயபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்., 30 இரவு, 11:30 மணிக்கு மேல், விருதுநகர் அருகே இளம் பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்தனர். அப்போது, பெண்ணின் கணவர், உறவினர்கள் ஜெயபாண்டியை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
News November 21, 2025
சாத்தூர் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பைபாஸ் மேம்பாலத்தில் திருநெல்வேலி நோக்கி சென்று லாரி மீது திருமங்கலத்தில் இருந்து வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.