News April 23, 2025
விருதுநகரில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News April 24, 2025
UPSC தேர்வில் சிவகாசியை சேர்ந்த இருவர் சாதனை

சிவகாசியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியைச் சேர்ந்த கோகுல கண்ணன் இருவரும் UPSC தேர்வில் வெற்றி பெற்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் வெற்றி விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு விஷயம். சிவகாசியில் பிரதான தொழிலாக உள்ள பட்டாசு தொழிலை மட்டும் நம்பி இருக்காமல் மாற்று தொழிலையும் ஏற்படுத்த வேண்டும் என்பது இவர்களின் ஆசையாக உள்ளது.Share.
News April 24, 2025
திருச்சி செல்லும் ஆண்டாள் சூடிய மாலை பட்டு வஸ்திரம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
News April 24, 2025
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

சிவகாசி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் (25) என்ற இளைஞர் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார் மாரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.