News April 7, 2025
விருதுநகரில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
Similar News
News April 8, 2025
ஆண்டாள்,ரெங்கமன்னார் ஆறாம் நாள் காலை புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 6-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் கோட்டைப்புரம் செட்டியார்கள் வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
News April 8, 2025
விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம்

டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் நாளை(ஏப்.9) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.
News April 8, 2025
டூவிலரில் சேலை சிக்கியத்தில் பெண் உயிரிழப்பு

சிவகாசியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் நேற்று காலை அவரது உறவினரின் மகன் மணிகண்டன் என்பவருடன் எப்போதும்வென்றானில் உள்ள கோவிலுக்கு டூவிலரில் சென்றுள்ளார். நாலாட்டின்புதூர் அருகே சென்ற போது காற்றில் பறந்த ஜோதிமணியின் சேலை திடீரென இருசக்கர வானகத்தின் சக்கரத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணி உயிரிழந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.