News August 15, 2024
விருதுநகரில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நாளை (ஆக.16) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலைநாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
விருதுநகர்: இரு குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய தாய்

விருதுநகர் மாவட்டம் சாத்துார் எஸ்.ஆர்.நாயுடு காலனியைச் சேர்ந்தவர் தங்கேஸ்வரி 35. இவர் டூவீலரில் தனது 8, 4 வயதுள்ள இரு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சாத்துார் ரோட்டில் மீனம்பட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நம்பர் ஒட்டி வந்த டூவீலர் மோதியதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக சதுரகிரி மலை ஓடைகளில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் மழை பெய்யாததாலும், ஓடைகளில் நீர் வரத்து குறைந்து விட்டதாலும் இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
News November 30, 2025
விருதுநகர்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகரில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.


