News April 22, 2025
விருதாச்சலம் அருகே கால்வாயில் விழுந்து குடிமகன் உயிரிழப்பு

விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (40) என்பவர் நேற்று குடிபோதையில் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தடுமாறி தலைகுப்புற விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருதாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கால்வாயில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 24, 2025
கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் (28.11.2025) அன்று நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் சார்ந்த குறைகளை தெரிவிக்க தங்களுடைய சிட்டா அடங்கள், கிசான் அட்டையுடன் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
கடலூர்: தபால் நிலையம் அருகே கிடந்த ஆண் சடலம்

மஞ்சகுப்பம், தலைமை தபால் நிலையம் ஆட்டோ நிறுத்தம் அருகே முகவரி மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட து. இறந்து கிடந்த வரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றிய தகவல் தெரிந்தால் கடலூர் புது நகர் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னாவை 9941408190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 210 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 141 மில்லி மீட்டர், சிதம்பரம் 140.2 மில்லி மீட்டர், புவனகிரி 140 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 103 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 86.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1681.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


