News April 17, 2025
வியப்பை உண்டாக்கும் வேலூர் குவளைகள்

வேலூர் அருகே கரிகிரி கிராமத்தில் சீன களிமண்ணால் தயார் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் நவாப்களால் பயன்படுத்தபட்டுள்ளன. அதில் குவளையின் உள்ளே ஊற்றப்படும் நீர் திரும்ப மேல் வழியாக வராமல், நீர் ஊற்றும் துவாரத்தின் வழி மட்டுமே வரும் வகையில் மேஜிக் குவளைகள் நவாப்களின் பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்பட்டுள்ளன. தனித்துவமான கரிகிரி மட்பாண்டங்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
Similar News
News December 18, 2025
கள்ளத்தனமாக மது விற்றால் கடும் நடவடிக்கை!

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (டிச.18) நடத்தப்பட்ட சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News December 18, 2025
வேலூர்: தந்தையை கொலை செய்த மகன் கைது!

வேலூர் அன்பூண்டியை சேர்ந்தவர் ரவி (60) இவரது மகன் இளையராஜா (36) கடந்த 7ம்தேதி புதிய கார் வாங்குவதற்கு 4 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இளையராஜா, தனது தந்தை ரவியை கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவியை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி நேற்று இறந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் இளையராஜாவை கைது செய்தனர்.
News December 18, 2025
வேலூர் மாவட்டத்தில் 4,726 பேர் எஸ்ஐ தேர்வு எழுத உள்ளனர்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்த, பொதுப்பிரிவினர் மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, முதன்மை தேர்வு, தமிழ் தகுதித்தேர்வு வரும் டிச.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 996 பெண்களும், 3,730 ஆண்களும் என மொத்தம் 4,726 தேர்வு எழுத உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


