News October 25, 2024

விமான நிலையத்தில் பேஸ்ட் வடிவிலான தங்கம் கடத்தல்

image

சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் 234 கிராம் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 18 லட்சத்து 24 ஆயிரத்து 30 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Similar News

News November 7, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் 2025-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற டிச.1ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு ரூ.2102 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இத்தொகையை அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

திருச்சி: இரண்டாம் நிலை காவலர் தேர்வு அறிவிப்பு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வு எழுத 5360 விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை நகலுடன் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

பஞ்சப்பூர்: புதிய பாலம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ.800 முதல் ₹.900 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!