News August 14, 2024
விமான டிக்கெட் கட்டணங்கள் 2 மடங்கு உயர்வு

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை செல்லும் விமான டிக்கெட் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. சுதந்திர தினம், வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.4,301 ஆக இருந்த கட்டணம் ரூ.10,796 ஆகவும், மதுரைக்கு ரூ.4,063 ஆக இருந்த கட்டணம் ரூ.11,716 ஆகவும், திருச்சி கட்டணம் ரூ.7,192 ஆகவும், கோவை ரூ.5,349 ஆகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News November 16, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்
News November 16, 2025
தேசிய பத்திரிகை தினம் – முதல்வர் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ’ ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம் என்றும், ஊடகங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே சக்தி என்றும் பதிவிட்டுள்ளார்.