News April 10, 2025
விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடினால்.. தண்டனை தெரியுமா?

விபத்தை ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோல விபத்து ஏற்படுத்திவிட்டு போலீசிடம் தகவல் தெரிவிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், தப்பி ஓடுவதும் குற்றம்தான். இதுகுறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 106(2)வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 31, 2025
அதிமுகவில் சர்ப்ரைஸ் நடக்கும்: சசிகலா

மீண்டும் தான், அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார். அதிமுகவில் விரைவில் சர்ப்ரைஸ் நடக்கும் என்றும் சூசகமாக பேசியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது OPS, செங்கோட்டையன், TTV தினகரன் ஆகியோர் ஒன்றாக இருந்த நிலையில், சசிகலாவின் இந்த பேச்சு அரசியல் கவனம் ஈர்த்துள்ளது. இதனால் அதிமுகவில் புதிய அணியாக உருவாகுமா (அ) தமிழக அரசியலில் தனிக் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News October 31, 2025
ஓய்வு பெறுகிறாரா ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி?

ஆஸி., மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி காயம் காரணமாக, ஓய்வில் இருந்தார். பின்னர், இந்தியாவுக்கு எதிரான செமி ஃபைனலில் விளையாடினார். 5 ரன்களிலேயே பெவிலியன் திரும்பிய அலிசாவுக்கு, ஆஸி.,வின் தோல்வி பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இந்நிலையில், இதுவே தனது கடைசி ODI உலகக் கோப்பை போட்டி என அவர் தெரிவித்துள்ளார். இது அலிசாவின் ஓய்வுக்கான சமிக்ஞை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
News October 31, 2025
பிஹார் பரப்புரையில் PK கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை

பிஹாரின் மொகமா பகுதியில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, 2 கான்வாயில் இருந்த கட்சி நிர்வாகிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாற, துலார்சந்த் யாதவ் என்ற நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அந்த இடமே பரபரப்பு களமாக மாற, போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


