News April 24, 2025
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணத் தொகை

தென்காசி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நேரிட்டு படுகாயமடைந்த நபர்களுக்கு நிவாரணத்தொகை, காலமான நபர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,00,000 ( Hit and Run Motor Accident Scheme )2022 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
தென்காசி: மிஸ் பண்ணாதீங்க.. நாளை கடைசி நாள்!

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாத சம்பளம் – ரூ.15,100 முதல் ரூ.35,100 வரை. 21 வயது நிரம்பிய தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 12) கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்கதோர் உடனே<
News August 11, 2025
தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (12.8.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News August 11, 2025
போதைப் பொருளுக்கு நாளை எதிரான விழிப்புணர்வு

தென்காசி, புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கூட்டரங்கில் நாளை காலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.