News June 25, 2024

விபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கதவாளம்‌ ஊராட்சியில் உதவி ஆசிரியரக பணியாற்றி வருபவர் மஞ்சுளா. இவர் இன்று காலை மாதனூர் உதவி கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கதவாளம் அருகே டூவிலரில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார்.

Similar News

News September 14, 2025

திருப்பத்தூர்: BE/ B.Tech,B.Sc/M.Sc,CA படித்திருந்தால் 1,56,000 வரை சம்பளம்

image

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து செப்-30குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

திருப்பத்தூர்: ஊர்காவல்படையில் சேர எஸ்.பி அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சியாமளா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்கள் -4 பெண்கள் -2 என 6 ஊர்காவல்படை பணிகள் காலியாக உள்ளதாகவும், அதற்கு விண்ணபிக்க விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாச்சல் பகுதியில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

திருப்பத்தூர: இன்று இரவு ரோந்து பணி

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!