News August 24, 2024
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

தமிழகம் முழுவதும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் விபத்தில் இறந்த 40 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆர்டிஓ பங்கேற்று நிவாரண தொகையை வழங்கினார்.
Similar News
News December 13, 2025
வேலூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு <
News December 13, 2025
வேலூர்: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்தத்துக்கான சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை திருத்திக்கொள்ள 13.12.25 சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வேலூர் தாலுகாவில் கீழ்அரசம்பட்டு, அணைக்கட்டு–முகமதுபுரம், காட்பாடி–கிளிதான்பட்டரை, குடியாத்தத்தில் மேற்கு எஸ்.மோட்டூர், கே.வி.குப்பத்தில் காவனூர், பேர்ணாம்பட்டில் சொக்கரிஷிகுப்பம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும்.


