News October 23, 2024
விபத்தில் சிக்கிய பெண்: மேயர், கமிஷனர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி 55வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் அருகே சாலையில் சென்ற மாடு, இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவி மீது மோதி பலத்த காயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், மாடுகளின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மேயர் கோ.ராமகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் சுக புத்ரா ஆகியோர் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
Similar News
News January 5, 2026
நெல்லை: பைக் விபத்தில் தூக்கி வீசப்பட்டு முதியவர் பலி..

கூடங்குளத்தை சேர்ந்த செல்லையா (78) நேற்று கூடங்குளம் மேற்கு பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பின்புறமிருந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லையாவை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 5, 2026
நெல்லை: இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்கள் பிரியங்கா – டேவிட்சன் தம்பதி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த டிச.31ம் தேதி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஆபத்தான நிலையில், பாளை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜன.2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியங்கா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நேற்று கணவர் டேவிட்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
News January 5, 2026
நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


