News April 6, 2025
விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

திருத்தணி அருகே உள்ள அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் (21). திருத்தணி அரசு கல்லூரியில் பயின்று வந்த இவர், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தனது நண்பர் ராகுலுடன் பைக்கில் திருத்தணி நோக்கி சென்றபோது, குமாரகுப்பம் அருகே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், பூவரசன் நேற்று (ஏப்ரல் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 17, 2025
ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.
News April 17, 2025
திருவள்ளூருக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்திற்கு நாளை (18.04.2025) பல்வேறு திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். *முதல்வரை சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. மனு வழங்கவும் வாய்ப்புண்டு. நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூரில், 369 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த லிங்கை <