News April 7, 2025
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்பு

அரியூரில் இருந்து ஊசூர் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று (ஏப்ரல் 6) அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, 4 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். செந்தில்குமார் (35), விக்னேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <
News April 8, 2025
அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில், வேலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 21 வரை ஆகும். கல்வித்தகுதி 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News April 8, 2025
தொடர்ந்து சதமடித்து வரும் வெயில்

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வருகிறது. நேற்றும் (ஏப்ரல் 7) வெயில் 101.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடைகளை கொண்டு செல்லுங்கள். இன்று (ஏப்ரல் 8) முதல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.