News February 17, 2025
வினாடி வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு அரசு, மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் லவ்டிஎன் வினாடிவினா போட்டி 17.02.25 அன்று நடக்கிறது. தமிழ்நாடு திட்டங்களால் பயன் பெற்ற மக்களின் அன்பையும், மனநிலையையும் அறியும் விதமாகச் X, Instagram, Facebook, WhatsApp, YouTube போன்ற சமூக ஊடகங்களில் போட்டிகள் நடத்தப்படும்.வெற்றிபெறும் நடத்தப்படும்.வெற்றிபெறும் அரசு சார்பில் பரிசு,பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
Similar News
News September 14, 2025
விருதுநகர்: கந்து வட்டி தொல்லையா?

விருதுநகர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு;
வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய 94439 67578 மற்றும் 90427 38739 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்
கந்துவட்டி தொடர்பாக புகார் அளித்தால் காவல்துறை சார்பில் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 14, 2025
சிவகாசியில் பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி

சிவகாசி, மீனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(49). இவர், சிவகாசி பேருந்து நிலையத்தில் (சனிக்கிழமை) நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது எரிச்சநத்தத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ராஜேஸ்வரி மீது மோதியதில் அவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் தங்கப்பாண்டி (28), நடத்துநர் கிருஷ்ணசாமி (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
News September 14, 2025
ஸ்ரீவி ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆவணி மாத 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னாருக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.