News August 10, 2024
வினாடி வினா போட்டிக்கு அழைப்பு

போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கான மாநில அளவிலான வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘சங்க இலக்கியமும் திருக்குறளும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் https://forms.gle/CN4ey1H6Lqsdyex18 என்ற இணையத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 1, 2025
விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதால் மில் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காத நபர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
News December 1, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 1, 2025
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி காயம்

ஆவரங்குளம் – இடையப்பட்டி செல்லும் வழியில் அரசகுளம் கார்த்திக்(32),மனைவி கார்த்தீஸ்வரியுடன் பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்ற போது பக்கத்து தோட்டத்தில் போட்டிருந்த மின்வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ஆவரங்குளம் குணசேகரன் மீது அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


