News August 26, 2024
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

ப.வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி (ம) வண்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காமதேனு விநாயகர், பாம்பின் மீது அமர்ந்து செல்லும் விநாயகர், தாமரை மீது அமர்ந்த விநாயகர், பஞ்சமுக விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மயில்வாகனத்தில் அமர்ந்து செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News November 21, 2025
வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்யும் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகின்ற சனி, ஞாயிறு (நவ-22) மற்றும் (நவ-23) ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியல் நிரப்பும் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடைபெற உள்ளன என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு படிவங்களை பூர்த்தி செய்யுங்கள்!
News November 21, 2025
நாமக்கல்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
News November 21, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (நவ.22) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என நாமக்கல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


