News August 26, 2024

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பு 1/2

image

சென்னையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான விதிமுறைகளை மாசுக்கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் தயாரிக்க பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது.

Similar News

News October 22, 2025

சென்னையில் கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு

image

சென்னையில் இன்று காலை 6 மணியளவில் காற்று மாசு 154 ஆக பதிவாகியுள்ளது.2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 ஆகவும் பதிவாகியிருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டு மிக மோசமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மிதமான அளவில் பதிவாகியுள்ளது. கனமழை பெய்த நிலையில் காற்று மாசு குறைந்தது.

News October 22, 2025

சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று (21.10.25)இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News October 21, 2025

BREAKING: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள பள்ளிக்கு மட்டும் நாளை(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!