News August 25, 2024

விநாயகர் சதுர்த்தியில் 1008 சிலைகள் வைக்க தீர்மானம்

image

மேலூரில் அகில பாரத இந்து மகா சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேலூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாநில விவசாய அணி தலைவர் ரமேஷ் பாண்டியன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் பெரி. செல்லத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலூர் தாலுகாவில் ஒரு அடி முதல் ஒன்பதரை அடி வரை 1008 விநாயகர் சிலைகள் வைப்பது என்பது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Similar News

News September 18, 2025

மதுரை காமராஜர் பல்கலை முக்கிய அறிவிப்பு

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய சான்றிதழ் படிப்புகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தொடர்பு வகுப்புகள் நடக்க உள்ளன. இந்த வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் பல்கலைக்கழகத்தின்
https://mkuniversityadmission.samarth.edu.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமும் நேரடியாக வரும் செப்-30 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News September 18, 2025

மதுரையில் தூய்மை பணி முடக்கம்

image

மதுரையில் தூய்மை பணி முடக்கம் காரணமாக நகரெங்கும் குப்பைகள் தேங்கியுள்ளன. OURLAND என்ற தனியார் நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சனை மோதல் நீடிப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குப்பைகள் தொடர்ந்து தேங்குகின்றன. இதனால் மதுரை நகர் முழுவதும் அங்காங்கே குப்பைகளாக காட்சியாளிகிறது.

News September 18, 2025

மதுரை டூ டெல்லி தினசரி சேவை

image

மதுரையில் இருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் விமானம் இயக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (செப். 17) முதல் தினசரி சேவை வழங்கப்படுகிறது. அதன்படி, தினமும் அதிகாலை 5:15 மணிக்கு டெல்லியில் புறப்படும் விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து காலை 8:55 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும்.

error: Content is protected !!