News March 20, 2025

வித்யா வீரப்பனுக்கு நா.த.க.வில் புதிய பொறுப்பு

image

சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் (18574358150) , நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

Similar News

News March 28, 2025

சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

image

சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ஈரோடு- நான்டெட் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07189/ 07190) வரும் மே மாதம் முதல் வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News March 28, 2025

சேலம் வழியாக  கோடைக்கால சிறப்பு ரயில்கள்

image

வரும் ஏப்.09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கும், ஏப்.10, 17, 24, மே 01 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (01005/01006) இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மார்ச் 30- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கும்.

News March 28, 2025

மக்களே உஷார்..சேலத்தில் அரங்கேறும் புதிய மோசடி!

image

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கைப்பேசியில் யாரேனும் தொடர்பு கொண்டு தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.அதற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என சொன்னாலும், Google Pay பின் நம்பர் போன்ற எதையும் சொல்லக்கூடாது என வலியுறுத்தினர். சைபர் கிரைம் புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.

error: Content is protected !!