News September 14, 2024
விதிமீறிய 1,000 வாகனங்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

தாம்பரம் அடுத்த திருநீர்மலை, குரோம்பேட்டை, மெப்ஸ், தாம்பரம் இந்துமிஷன் சந்திப்பு, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய இடங்களில் எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் 1,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வாகன உரிமையாளர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
செங்கல்பட்டு: 12th போதும், ரூ.2,09,200 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்றுனர் & பயிற்றுனர் அல்லாத 14,967 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,500 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
செங்கல்பட்டு: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

செங்கல்பட்டு மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
செங்கல்பட்டு: சாலை விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி சந்திப்பு அருகே நேற்று முன்தினம் 65 வயது முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, முதியவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


