News January 2, 2025

விதிகளை பின்பற்றதாத நிறுவனங்கள் மூடப்படும் – சிவகங்கை

image

சிவகங்கை: சுற்றுச்சூழல் வனம் & சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவித்துள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நிறுவனங்களை மூடி அபராதம் விதிக்கப்படும் – ஆட்சியர்
*ஷேர்*

Similar News

News July 11, 2025

12ம் தேதி தேவகோட்டையில் சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக்க 12.07.2025 (சனிக்கிழமை) அன்று தேவகோட்டை, இராம்நகர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி கேட்டுக்கொண்டுள்ளார்.

News July 10, 2025

சிவகங்கையில் நாளை மதுபான கடைகள் மூடல்

image

சிவகங்கை நகரில் உள்ள ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் நாளை (ஜூலை.11) பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு நாளை ஒரு நாள் மட்டும் சிவகங்கை நகர் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

சிவகங்கை: அரசு பள்ளிகளில் 1996 காலிப்பணியிடம்

image

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து இன்று முதல் ஆக.12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்களுக்கு இந்த செய்தியை Share செய்யவும்.

error: Content is protected !!