News April 27, 2025
விண்ணமங்கலத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் மரணம்

திருக்காட்டுப்பள்ளி விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் யோகேஷ் (16). தனது பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
தஞ்சை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு செய்யும் அனைத்து மீன் வளர்ப்பு விவசாயிகளும், மீன் வளர்போர் மேம்பாட்டு முகாமில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதில் உறுப்பினர் ஆகும் மீன வளர்போருக்கு தமிழக அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.11) இரவு 10 மணி முதல் இன்று (நவ.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


