News August 16, 2024
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தனியார் நிறுவனங்களில் நேற்று (ஆகஸ்ட் 15) ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள 89 தனியார் நிறுவனங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரியவந்தது. அந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Similar News
News October 31, 2025
தூத்துக்குடி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்?

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து நேற்று பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
News October 31, 2025
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு விருது

ஒன்றிய அரசின் துறைமுகம் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நீர்வழி போக்குவரத்து வார விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ‘பசுமை தொலை நோக்கு’ விருதை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வென்றது. மேலும், இதில் மூன்று முன்னணி நிறுவனங்களுடன் 42 ஆயிரம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.
News October 31, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று (அக். 30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


