News March 28, 2025
விடுதியில் சேர ஏப்.6 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில், 2025ம் ஆண்டு சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான தேர்வு போட்டி வரும் ஏப்ரல் 8 ம் தேதி நடக்கிறது. இதில், சேர்வதற்காக, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 6 தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 17 வயது நிரம்பிய பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
கரூரில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு கரூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க
News October 15, 2025
கரூர் கலெக்டர் எச்சரிக்கை

வேதி உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும் போது மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், விவசாய பயிர்களின் வளர்ச்சி பாதித்து, மகசூல் குறைந்து வருகிறது. பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, அதன் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியம் மேலும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என என கரூர் கலெக்டர் அறிவுறித்தியுள்ளார்.
News October 15, 2025
துயர சம்பவம்; மீண்டும் கரூர் செல்லும் விஜய்?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.