News August 25, 2024
விஜய் வசந்த் எம்.பி-க்கு நன்றி தெரிவித்த மக்கள்

“குமரி மாவட்டத்தில் வாணியக்குடி மீனவர் கிராமத்தில் துறைமுகப் பணியை உடனே தொடங்க வேண்டும்” என கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அந்தப் பணியை தொடங்கினால் மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய விஜய் வசந்துக்கு ஊர் மக்கள் சார்பில் நேற்று சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 16, 2025
தற்காலிக பாதை அமைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையான் கோவில் தெப்பக்குளத்தின் பக்க சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இன்று தெப்பகுளத்தின் கருங்கல் சுவர்களை சரி செய்ய கட்டுமான பணிக்காக போக்குவரத்திற்கு தற்காலிக பாதை அமைக்கும்பணி
நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவும், மேலும் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் இந்து இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
News November 15, 2025
BREAKING குமரியில் மிககனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
குமரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


