News January 22, 2025

விஜயநாராயணத்தில் மக்கள் தொடர்பு முகாம்

image

விஜயநாராயணம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் 20.02.2025 அன்று நடைபெற உள்ளது. அதற்கு முன்னோடியாக மன்னார்புரம் நூலகத்தில் வைத்து காலை 10.00 மணி முதல் 01.00 மணிவரை மனுக்கள் பெறப்படும். இதில் மனுக்கள்பெறப்பட்டு மக்களின் தேவை குறித்து சிறப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News January 10, 2026

நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருநெல்வேலி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 10, 2026

நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

image

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News January 10, 2026

நெல்லை: 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்

image

V.K.புரத்தைச் சேர்ந்த சலீம் என்ற மாணவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன மாணவனை இரவு 9 மணிக்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.

error: Content is protected !!