News October 25, 2024
விசைப்படகு உரிமையாளர்களுக்கு டீசல் மானியம்

புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசின் திட்டத்தின்கீழ் 2024-25 நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டிற்கு அதாவது ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த 100 பதிவு பெற்ற விடைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மீதம் உள்ள டீசல் மானிய தொகை இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.
Similar News
News December 4, 2025
புதுச்சேரி: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை, வரும் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில், இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
News December 4, 2025
காரைக்கால்: நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

காரைக்கால் நகராட்சி ஆணையர் சுபாஷ் வெளியிட்டுள்ள செய்தியில், பொது இடங்களில் பன்றிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 7 தினங்களுக்குள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளையும், தெருவில் சுற்றி திரியும் பன்றிகளையும் அப்புறப்படுத்தி விடவேண்டும். விதிகளை மீறுவோர் மீது காரைக்கால் நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.
News December 4, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


