News April 20, 2025
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
Similar News
News November 7, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (07.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
கோவை சம்பவம்: அதிரடி நடவடிக்கை

கோவையில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சமீபத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பவன்குமார் தலைமையில் சமூக நலத்துறை, காவல் துறை இணைந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. அனுமதியின்றி இயங்கும் விடுதிகள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 7, 2025
நாளை முதல் சிறப்பு வரிவசூல் முகாம்கள்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2025-26 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்க சிறப்பு முகாம்கள் நவம்பர் 8, 9 தேதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்தார்.


