News January 1, 2025
விசுவக்குடி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் அமைந்துள்ள அணையானது கடந்த மாதம் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக ஆங்கில புத்தாண்டான இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் இளைஞர்கள் வாய்க்காலில் வரும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
Similar News
News November 22, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) அவ்வப்போது மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க!
News November 22, 2025
பெரம்பலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <
News November 22, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற நவ.24ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர்கள் மற்றும் நிறுவன விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர் இது தொடர்பாக புகார் மற்றும் குறைகள் இருப்பின் இக்கூடத்தில் பங்கேற்று, தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


