News August 17, 2024
விசிக தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளினை முன்னிட்டு மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
Similar News
News November 14, 2025
விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி, உதவி திட்ட அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News November 14, 2025
மீனவர் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

மயிலாடுதுறை மாவட்ட படித்த பட்டதாரி மீனவ இளைஞர்களுக்கான குடிமைப் பணித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுத்தியுள்ளார். தகுதியுள்ள மீனவ பட்டதாரி இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 14, 2025
தரங்கம்பாடி அருகே கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாகச் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புக்கான துவக்க விழா தரங்கம்பாடி ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் 15.11.2025 காலை 10 மணிக்குத் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


