News September 15, 2024
விசிகவின் மது ஒழிப்பு மாநாடு: அமைச்சரின் பதில்

விசிக தலைவர் திருமாவளவன் எல்லா கட்சியையும் தான் அழைக்கிறார், திமுக கொள்கையிலும் இந்த ஒப்புதல் இருக்கிறது, அதிமுகவிற்கும் இந்த ஒப்புதல் இருக்கிறது. அதைப் போல எல்லோருக்கும் ஒப்புதல் இருக்கிறது என்கின்ற பொதுவான கருத்தைத்தான் தெரிவித்து அழைத்துள்ளார். எனவே இதனை முறையாக ஆய்வு செய்யலாம் என அரியலூரில் போக்குவரத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் நேற்று தெரிவித்துள்ளார். கருத்துக்களை பதிவிடவும்
Similar News
News November 7, 2025
அரியலூர்: மாரத்தான் போட்டி அறிவிப்பு

அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்ட போட்டிக்கு இணையான, நெடுந்தூர ஓட்ட போட்டிகள் (நவ.8) தேதி காலை 07.30 மணியளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டிகளின் விவரங்கள் தொடர்பாக, அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 7, 2025
அரியலூர்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரியலூர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நவம்பர் 8ஆம் தேதியன்று அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல் உள்ளிட்டவைகள் குறித்து விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என்றார்.
News November 7, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


