News August 11, 2024
விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். இதுவரை 150 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே <
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: SIR சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் டிச.11ம் தேதி நிறைவு பெற உள்ளது. கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி சட்டசபை தொகுதிகள் உளுந்தூர்பேட்டை – 04149- 222255, ரிஷிவந்தியம் – 04151- 235400, சங்கராபுரம் – 04151- 235329, கள்ளக்குறிச்சி (தனி)-04151-222449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
கள்ளக்குறிச்சி: தொடரும் மாடுகளின் உயிரிழப்பு!

மூங்கில்துறைப்பட்டு;பாக்கம் ஏரிப் பகுதியில் மான்களை வேட்டையாட சமூக விரோதிகள் அமைக்கும் சுருக்குக் கம்பிப் பொறிகளில், அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் சிக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது. புதூரைச் சேர்ந்த ஒருவரின் மாடு அண்மையில் பொறியில் சிக்கி மீட்கப்பட்டது. இதை செய்பவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் விலங்கு நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


