News October 24, 2024

விக்ரவாண்டியில் தவெக பிரமாண்டமான கட்-அவுட்கள்

image

விக்கிரவாண்டி அருகே வி சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான மாநாட்டு திடல் பகுதியில் பணிகள் மும்முரமாக இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இங்கு காமராஜர், பெரியார், விஜய், அம்பேத்கர் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட உருவ கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 9, 2026

விழுப்புரத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் நாளை (ஜன.10) கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

விழுப்புரம்: விஜய்க்கு பேனர்-தவெக நிர்வாகிக்கு வழக்கு!

image

விழுப்புரம்: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தவெக-வினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், பேனர் வைத்த தவெக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 9, 2026

விழுப்புரம்: முதியவர் உடல் சிதறி பலி!

image

விழுப்புரம்: கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவல் கிடைத்த உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை-மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் மோதி பலியானது தெரியவந்தது. பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!