News October 24, 2024
விக்கிரவாண்டி மாநாடு பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார்

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான பாதுகாப்பு பணியில் 5,500 போலீசாரை ஈடுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில், 2 டி.ஐ.ஜி., 10 காவல் கண்காணிப்பாளர், 20 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 50 டி.எஸ்.பி., 200 ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News November 1, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அக்.31 இரவு முதல் நவ.1 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
விழுப்புரம் – சென்னை மெமு ரயில் சேவை மாற்றம்

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் யார்டில் பணிகள் நடக்க உள்ளதால் தாம்பரம் – விழுப்புரத்திற்கு நவ.1, 2 ஆகிய தேதிகளில் காலை 9:45 மணிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் – சென்னை கடற்கரைக்கு நவ-1, 2 ஆகிய தேதிகளில் மதியம் 1:40 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் விழுப்புரம்- திண்டிவனம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
News October 31, 2025
விழுப்புரம்: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள்<


