News August 27, 2024
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு

விக்கிரவாண்டி உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5 – 7% வரை கட்டணம் உயர்கிறது. இதனால், ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியது வரும். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு, லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
விழுப்புரத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு: 3,000 பேர் எழுதுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 பேர் இன்று(ஆக.31) டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி மற்றும் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். தேர்வெழுத உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News August 30, 2025
விழுப்புரம் : ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை… சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் பீல்டு இன்ஜினியர், பீல்டு சூப்பர்வைசர் பணிக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், ECE, IT அல்லது அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.23,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்.17-க்குள் <
News August 30, 2025
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணிநீக்கம்

விழுப்புரம் நகர பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆங்கில பாட ஆசிரியர் பால் வின்சென்ட் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் பால் வின்சென்ட் இன்று (சனிக்கிழமை) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.