News June 27, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை SDPI கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமையும். பண விநியோகம், முறைகேடு உள்ளிட்டவற்றால் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு என பல கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 16, 2025
விழுப்புரத்தில் கனமழை வெளுக்கும்!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நாளை (நவ.17) & நவ.18ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட, மாவட்ட ஆட்சியருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணி அலெர்ட் பண்ணுங்க.
News November 16, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
திண்டிவனம் சார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி உட்பட பலர் உள்ளனர்.


