News April 12, 2025
விக்கிரவாண்டியில் நாய் கடித்து 7 ஆடுகள் பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் திடீரென பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Similar News
News November 2, 2025
விழுப்புரத்தில் வசமாக சிக்கிய குற்றவாளி!

சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29). இவா் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திரப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு வழக்கில் சாட்சியாக உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவருக்கு பாலாஜி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
News November 2, 2025
விழுப்புரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 2, 2025
விழுப்புரம் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <


