News April 5, 2025
வாழ்வை பாசிட்டிவ் ஆக்கும் விகிர்தீஸ்வரர்!

வாழ்வில் பல்வேறு மன அழுத்தம், வெறுமை, சலிப்பு உள்ளவர்களின் எண்ணங்களை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்தும் கடவுளாக நம்பப்படுபவர் கரூர் மாவட்டத்தில் உள்ள விகிர்தீஸ்வரர். விகிர்தீஸ்வரர் என்றாலே நன்மை தருபவர் என்று அர்த்தம். இந்தக் கோயிலில் இவரை தரிசித்து விட்டுதிரும்பும் போது கூட படி ஏறி தான் செல்ல வேண்டும். அந்த தருணம் முதலே தரிசித்தவர் வாழ்க்கைப் படியும் ஏறுமாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 5, 2025
கரூர் மக்களே நாளை இங்க போங்க!

கரூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மனுஜ் ஷ்யாம் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான “நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்” நாளை (டிசம்பர்-6) சனிக்கிழமை புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
News December 5, 2025
குளித்தலை அருகே சமையல் பாத்திரத்தில் விழுந்த சிறுமி பலி

குளித்தலை அருகே கொம்பாடிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார் மகள் தமிழினி (03). இந்த சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது கட்டில் இருந்து தவறி சமையல் செய்து கொண்டிருந்த பாத்திரத்தில் விழுந்து உடல் முழுவதும் சுடுநீர் பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். மேலும் லாலாபேட்டை நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
தமிழக அளவில் மாஸ் காட்டிய கரூர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற72 ஆவது தமிழ்நாடு கபடி மாநில சாம்பியன் போட்டியில் காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், சேலம், திருச்சி, சென்னை, அனைத்து அணிகளையும் வென்று முதல் இடத்தை கரூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்து பட்டத்தை 30 ஆண்டுகள் பிறகு வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு அணியின் வீரர்களுக்கு மாவட்ட கபடி குழு சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்தனர். உங்களது வாழ்த்துகளை கமெண்ட் பண்ணுங்க


