News October 23, 2024

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகள் பயனடைந்துள்ளனர்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 5, 2025

குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

அஜித் மீது நிகிதா அளித்த புகாரின் FIR ரிலீஸ்

image

அஜித் மீது நிகிதா ஜூன்.27ஆம் தேதி அளித்த புகாரின் FIR தற்போது வெளியாகியுள்ளது. அதில், தன்னுடைய ஒன்பதரை சவரன் நகைகளை காணவில்லை என்றும்,அஜித் வற்புறுத்தி சாவியை கேட்டதாகவும் FIR-ல் பதிவாகியுள்ளது. ஆனால், நிகிதா முன்னதாக தனது தாயாருக்கு வீல் சேர் கேட்டதற்கு ரூ.500 அஜித் கேட்டதாக தெரிவித்திருந்தார். நிகிதாவின் புகாருக்கும், அவரின் விளக்கத்திற்கும் பல்வேறு முரண் இருப்பது இந்த FIR மூலம் தெரியவந்துள்ளது.

News July 5, 2025

சிவகங்கை: தொழில்நெறி விழிப்புணர்வு வாரம்

image

தமிழக அரசின் ஆணைப்படி, ஜூலை 9 முதல் 15ஆம் தேதி வரை சிவகங்கை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இளைஞர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் வளர்ச்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், மகளிர், மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

error: Content is protected !!