News March 2, 2025

வாழ்நாள் முழுவதும் செருப்பு போட முடியாது தம்பி: செந்தில் பாலாஜி

image

கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர் தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டும், செருப்பு போட மாட்டேன் என்றும் புது கதையை சொல்லும் தம்பிக்கு நான் இப்போது சொல்கிறேன். இது பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். எனவே வாழ்நாள் முழுக்க செருப்பே போட முடியாது என்றார்.

Similar News

News April 22, 2025

ஜிம் உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த ஏப்.19ல் ஊக்க மருந்துகளை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் ஸ்டேஷனில் ஜிம் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை ஊக்க மருந்துகளாக கொடுக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 21, 2025

கோவை மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️கோவை (தெ) வட்டாட்சியர் 0422-2214225. ▶️கோவை (வ) வட்டாட்சியர் 0422-2247831. ▶️மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் 0425-4222153. ▶️சூலூர் வட்டாட்சியர் 0422-2681000. ▶️அன்னூர் வட்டாட்சியர் 0425-4299908. ▶️பேரூர் வட்டாட்சியர் 0422-2606030. ▶️மதுக்கரை வட்டாட்சியர் 0422-2622338. ▶️கி.கடவு வட்டாட்சியர் 04259-241000. ▶️ஆனைமலை 0425-3296100. ▶️பொள்ளாச்சி 04259-226625. ▶️வால்பாறை 0425-3222305. SHARE பண்ணுங்க.

News April 21, 2025

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு

image

தவெக பூத் கமிட்டி மாநாடு, வரும் 26,27 ஆகிய தேதிகளில், கோவை சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, மேற்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பேசவுள்ளார். இதில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு விளக்கவுரை ஆற்றவுள்ளார்.

error: Content is protected !!