News November 22, 2024
வாழ்த்துக்கள் தெரிவித்த தேனி முன்னாள் எம்.பி

மாலத்தீவில் நடைபெற்ற உலகம் முழுவதும் மிகவும் பரவலாக அறியப்பட்ட 15-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி பெற்றுள்ளார். இதையத்துது, அவருக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தேனி முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
தேனி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

தேனி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.
News December 9, 2025
தேனி: கஞ்சா கடத்திய பெண் கைது

மதுரை மாவட்டம் ஆரப்பாளத்தை சேர்ந்த மாயி மகன் தங்கப்பாண்டி (32). மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி இந்துமதி (39). இவர்கள் இருவரும் தேனி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்றுள்ளனர். இருவரிடமிருந்தும் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தேனி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
News December 9, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கிருதுமால்நதி பகுதிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கிருதுமால் நதி பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று 4 மணியிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அணையில் இருந்து இரண்டாம் போக பாசனம் மற்றும் குடிநீருக்காக என 769 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.


