News May 16, 2024

வாலிபர்கள் மீது மரக்கிளை விழுந்து விபத்து

image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லிங்கநாயக்கனல்லி அடுத்த தாஸ் நகர் பகுதியில் ஊர் பகுதியில் அமைந்துள்ள அரச மரத்தடியில் வாலிபர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து வாலிபர்கள் மீது விழுந்தது. அதில் ஸ்ரீதர்(21) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News January 3, 2026

தருமபுரி: ஒரே நாளில் ரூ.2.80 கோடிக்கு மது விற்பனை சாதனை!

image

தருமபுரி மாவட்டத்தில் 66 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றின் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் மது விற்பனை வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது, என அறைவிப்பு.

News January 3, 2026

தருமபுரியில் பயங்கரம்: நேருக்கு நேர் மோதி விபத்து!

image

தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து மொரப்பூருக்கு நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று சென்றது. மொரப்பூர் மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே மொரப்பூர் சிங்காரவேலன் தோப்பு முனீஸ் வரன் கோயிலில் இருந்து, ஆம்பூர் நோக்கி சென்ற வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில், வேனில் பயணம் செய்த ஆம்பூர் கஸ்பாவே சின்னகம்மார தெருவை சேர்ந்த கவுரி, சரவணன், பங்கஜம், சாந்தி, கார்த்திகேயன், பிரியா, ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.

News January 3, 2026

தருமபுரி: இனி ஆதார் கார்டு வாங்க.. HI போடுங்க!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!