News April 22, 2025
வாலிபரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியவர் கைது

பெரம்பலூர் கபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லுசாமி (31). இவர் தனது உறவினரான கணபதி நகரைச் சேர்ந்த சிவராமலிங்கம்(44) என்பவருக்கு கடனாக ரூ.1 கோடியே 52 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் நல்லுசாமியை ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக நல்லுசாமி புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிவராமலிங்கத்தை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News July 8, 2025
10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

பெரம்பலூர் மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
வரதட்சணை கொடுமை-கணவர் குடும்பத்தினர் மீது புகார்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷபானா (23) என்பவருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் ஷபானாவின் 13½ பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக, ஷபானா நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி-யை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.
News July 8, 2025
பெரம்பலூர் : மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கையை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின்னணு குடும்ப அட்டை பயனாளிகளுக்கு வழங்கினார்.