News April 22, 2025
வாலிபரிடம் ஒன்றரை கோடி ரூபாய் ஏமாற்றியவர் கைது

பெரம்பலூர் கபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லுசாமி (31). இவர் தனது உறவினரான கணபதி நகரைச் சேர்ந்த சிவராமலிங்கம்(44) என்பவருக்கு கடனாக ரூ.1 கோடியே 52 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் நல்லுசாமியை ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக நல்லுசாமி புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சிவராமலிங்கத்தை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 20, 2025
பெரம்பலூர் திடீர் ஆய்வு நடத்திய ஆட்சியர்

பெரம்பலூர், 147 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகராட்சி பகுதியில், வாக்களர்களால் பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை, தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் இன்று (20.11.2025) பணிகளை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 20, 2025
பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் முன்னேற்பாடுகள்

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இன்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.
News November 20, 2025
பெரம்பலுர்: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..


