News August 24, 2024
வாலாஜாபேட்டை அருகே ஆற்றில் கிடந்த ஆண் சடலம்

வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பாலாற்றில் இன்று (24-08-2024) காலை 11.30 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 27 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தெரிவித்தார்.
News September 17, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராணிப்பேட்டையில் நாளை செப்டம்பர் 18 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் தி டவுன் ஹால் காந்தி சாலை அரக்கோணத்திலும், சோளிங்கர் வன்னியர் சத்திரம் தென் வன்னியர் தெருவிலும், அரசு மேல்நிலைப்பள்ளி வளர்புரம், அரக்கோணம் வாலாஜா விபிஆர்சி கட்டிடம், வி, சி, மோட்டூர் மற்றும் ஆற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் சக்கரமல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
News September 17, 2025
இராணிப்பேட்டை: இரவு ரோந்து பணிகள் விபரம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (17.09.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். ராணிப்பேட்டை, அரக்கோணம் உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையினர் ரோந்து செய்கிறார்கள். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக 9884098100 அல்லது 04172-290961 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.