News May 17, 2024
வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

கோடை காலத்தில் பயணிகள் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என நேற்று சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை தோறும் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் வாராந்திர ரயில் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரயில்வே வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் மங்களம் நால்ரோடு பகுதியில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை சோதனை செய்தபோது, கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சையத் அன்சாரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
News November 28, 2025
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் திருத்த படிவங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் திரும்ப பெற்றுக் கொள்வார்கள். வாக்காளர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 4ம் தேதி ஆகும். இறுதி நாள் வரை காத்திருக்காமால் ஓரிரு தினங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.