News March 20, 2024
வாணியம்பாடி அருகே பெண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் 20.03.2024 இன்று காலை 9 மணியளவில் விவசாய கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர். விசாரணையில் வாணியம்பாடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்த மது பிரியா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
திருப்பத்தூர்: 30 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், வேலூரில் இருந்து 50 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் நாளை நவம்பர் 4 மாலை முதல் இயக்கப்படுகிறது. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 3, 2025
திருப்பத்தூர்: ஏலகிரி மலை சென்றவருக்கு நேர்ந்த சோகம்

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் நேற்று (நவ.02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றார். இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


